• About
    • தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை

      எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

    • TAMIL CHATROOM

      உலக தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு விளக்கம்: ஒரு இணையத்தளம் TAMILDHESAMCHAT.COM என்கின்ற நம்பகமான ஒரு பொழுது போக்கு தளம்.

    • tamilkadalai.com

      Tamil Movies,Gallery,tamilchat, tamil chat,Tamil Serials, movie, music,cinema, video, mp3, songs,new, Dvd, vcd, News, serials, dvd-r,Video Club,Tamil Chatl.

    • தமிழீழதேசிய அடையாளம்

      தமிழீழதேசிய அடையாளம்.

    செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப தொடர்புகளுக்கு
    ஸ்கைப் =TAMILJANCY MAIL=kesavaneelam@hotmail.com

    Monday, July 11, 2011

    தொலைநோக்கி, நுண்நோக்கி பிறந்த கதை!





    தூரத்தில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவும் டெலஸ்கோப், 1608-ல் ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற டச்சுக்காரரால் உருவாக்கப்பட்டது.

    1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கிகளும், பைனாகுலர்களும் இதன் வழி வந்தன.

    18-ம் நூற்றாண்டில், கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர்.

    நுண்ணிய பொருளை பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ரோஸ்கோப்) டச்சு கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென் 1590-ல் கண்டுபிடித்தார்.

    கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    17-ம் நூற்றாண்டின் மத்தியில், டச்சு நாட்டுக் கண்ணாடிப் பொருள் தயாரிப்பாளரான அண்டன் லீவென்குக், மைக்ரோஸ்கோப்பில் பாக்டீரியாவையே பார்க்கும் அளவுக்கு மேம்படுத்தினார். ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார்.

    இதே காலகட்டத்தில், பிரிட்டடிஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக் “மைக்ரோகிராபியா” என்ற நூலை வெளியிட்டார்.

    அதில் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன்பின் மைக்ரோஸ்கோப் பிரபலமானது.

    நுண்ணுயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதே முக்கியமான காரணம்.

    0 comments:

    Post a Comment