வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனியுடன் அவரது மனைவி சாக்ஷியும் சென்றுள்ளார். பிறந்தநாள் தினத்தின்போது டோனி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.
போட்டியை அவரது மனைவி சாக்ஷி மைதானத்தில் இருந்தபடி ரசித்து கொண்டிருந்தார். திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதனால் மைதானத்தில் இருந்து சாக்ஷி வெளியேறினார்.
தொடர்ந்து அவர் வீரர்கள் தங்கியிருக்கும் போர்ட் யங் ஓட்டலுக்கு சென்றார். நேராக சமையல் அறைக்கு சென்ற அவர், டோனி பிறந்தநாளையொட்டி நானே சமைக்க விரும்புகிறேன் என கூறி ஓட்டல் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கினார்.
தொடர்ந்து ரெய்னாவின் நெருங்கிய தோழியும், முன்னாள் விமானத்துறை மத்திய அமைச்சர் பிரபுல் படேலின் மகள் பூர்ணம் படேலுடன் இணைந்து சமையல் வேலைகளை தொடங்கினார்.
இவர்களுக்கு உதவியாக ஓட்டல் ஊழியர்களும் களமிறங்கினர். பருப்பு, சிக்கன், பிகிந்தி, பனீர், ரொட்டி, சாதம் உள்ளிட்டவைகளை 5 மணி நேரத்தில் சமைத்து சாக்ஷி அசத்தினார்.
போட்டி முடிந்து ஓட்டல் அறைக்கு திரும்பியதும் டோனி உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் தான் சமைத்த உணவை சாக்ஷி விருந்தாக கொடுத்தார்.
0 comments:
Post a Comment