• About
    • தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை

      எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

    • TAMIL CHATROOM

      உலக தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு விளக்கம்: ஒரு இணையத்தளம் TAMILDHESAMCHAT.COM என்கின்ற நம்பகமான ஒரு பொழுது போக்கு தளம்.

    • tamilkadalai.com

      Tamil Movies,Gallery,tamilchat, tamil chat,Tamil Serials, movie, music,cinema, video, mp3, songs,new, Dvd, vcd, News, serials, dvd-r,Video Club,Tamil Chatl.

    • தமிழீழதேசிய அடையாளம்

      தமிழீழதேசிய அடையாளம்.

    செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப தொடர்புகளுக்கு
    ஸ்கைப் =TAMILJANCY MAIL=kesavaneelam@hotmail.com

    Monday, July 11, 2011

    பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க




    இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை பயன்படுத்த முடியும்.

    இப்படி நாம் உருவாக்கும் கடவுச்சொல்லை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர்.

    இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது. கடவுச்சொல்லை உருவாக்கும் பொழுது கடினமாக உருவாக்க வேண்டும். எண்கள், பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters) மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு கடவுச்சொல்லை உருவாக்கினால் உங்களுடைய கடவுச்சொல்லை யாராலும் கண்டறிய முடியாது.

    மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

    முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தவுடன் .exe கோப்பை நிறுவச் செய்ய டபுள் க்ளிக் செய்து வரும் விண்டோவில் Run கொடுக்கவும். அடுத்து வரும் விண்டோவில் Next கொடுக்கவும்.

    அந்த விண்டோவில் டூல்பார் இன்ஸ்டால் ஆப்சன் இருக்கும் அதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடவும். அடுத்து வரும் இரண்டு விண்டோக்களில் உள்ள SKIP பட்டணை அழுத்தவும். அடுத்து கடைசியாக Finish என்ற பட்டணை அழுத்தினால் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் நிறுவி விடலாம்.

    உபயோகிக்கும் முறை: முதலில் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கான கடவுச்சொல்லை தேர்வு செய்யுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த கடவுச்சொல்லை கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும்.

    அடுத்து வரும் விண்டோவில் Password Length என்ற இடத்தில் உங்கள் கடவுச்சொல் அளவை தேர்வு செய்து(குறைந்தது 10 தேர்வு செய்யவும்) அடுத்து கடைசியாக உள்ள Quantity என்ற இடத்தில் உங்கள் எதனை கடவுச்சொல்லாக்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கீழே உள்ள Create Password(s) என்ற பட்டணை அழுத்தவும்

    அடுத்து உங்களுக்கான கடவுச்சொல் பட்டியல் வரும். இதில் பச்சை நிறத்திலும், வெளிர் நீல நிறத்திலும் உள்ள paaswerdkal சிறந்த கடவுச்சொற்கள்.

    சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஏதேனும் கடவுச்சொல் வந்தால் அவைகளை உபயோகிக்க வேண்டாம். இந்த மென்பொருளில் ஒரு முறை வந்த கடவுச்சொல் திரும்பவும் வராது. ஆகையால் நம்முடைய கடவுச்சொல் மற்றவர்க்கும் தெரியலாம் என்ற அபாயம் இல்லை.

    இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக நம்முடைய கடவுச்சொல்லை சேமித்து வைக்க Password Manager என்ற வசதியும் உள்ளது. இதனால் நாம் கடவுச்சொல்லை மறந்துவிடுவோம் என்ற பயமும் இல்லை.

    இது போன்று நமது கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்கலாம்.

    பாதுகாப்பாக கடவுச்சொல்லை உருவாக்க இங்கே கிளிக் செய்யவும்.

    0 comments:

    Post a Comment