• About
    • தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை

      எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

    • TAMIL CHATROOM

      உலக தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு விளக்கம்: ஒரு இணையத்தளம் TAMILDHESAMCHAT.COM என்கின்ற நம்பகமான ஒரு பொழுது போக்கு தளம்.

    • tamilkadalai.com

      Tamil Movies,Gallery,tamilchat, tamil chat,Tamil Serials, movie, music,cinema, video, mp3, songs,new, Dvd, vcd, News, serials, dvd-r,Video Club,Tamil Chatl.

    • தமிழீழதேசிய அடையாளம்

      தமிழீழதேசிய அடையாளம்.

    செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப தொடர்புகளுக்கு
    ஸ்கைப் =TAMILJANCY MAIL=kesavaneelam@hotmail.com

    Friday, July 29, 2011

    நார்வேயில் மீண்டும் மர்ம மனிதன் நடமாட்டம்


    30 July, 2011 by admin
    அமைதிக்கு பெயர் பெற்ற நார்வே நாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரட்டை தாக்குதல் நடந்தது. தலைநகர் ஆஸ்லோவில் நடந்த குண்டு வெடிப்பிலும், ஒரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டத்திலும் 83 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து நாடு முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு மீண்டும் வெடிகுண்டு பீதியால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்லோ மத்திய ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு பஸ் புறப்பட தயாரானது. அதில் 20 பயணிகள் இருந்தனர்.

    பஸ் கிளம்ப தயாரானதும், பஸ்சில் இருந்த மர்ம மனிதன் தான் கொண்டு வந்த சூட்கேஸை பஸ்சில் வைத்து விட்டு வேகமாக இறங்கினான். கறுப்பு நிறத்தில் உடையும், வெள்ளை நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்த அவன், வேகமாக நடையை கட்டினான்.

    இதை ரகசிய கேமிராவில் பார்த்து விட்ட அதிகாரிகள் அந்த பஸ்சின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பஸ்சில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். தற்காலிகமாக ரெயில் நிலையமும் மூடப்பட்டது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பஸ்சில் இருந்து கைப்பற்றப்பட்ட சூட்கேஸ் மிகவும் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. அதன் உள்ளே ரோபோட் ஒன்று இருந்தது. வெடிகுண்டு எதுவும் இல்லை.

    இதையடுத்து, அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து ரெயில் நிலையத்திலும் சோதனை போடப்பட்டது. பஸ்சில் சூட்கேசை விட்டுச் சென்ற �மர்ம� ஆசாமி யார்? எதற்காக அதை விட்டுச் சென்றான்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    0 comments:

    Post a Comment